ஜெயராஜ்-பென்னிக்ஸை காவல் நிலையத்தில் அதிகாரிகள் முதற்கொண்டு அடிமட்ட காவலர் வரை அடித்துத் துன்புறுத்தி கொலை செய்த வழக்கில், அடித்து சதைகள் பிய்த்து எடுக்கப்பட்ட ஜெயராஜும், பென் னிக்ஸூம் ரத்தக்கறையுடன் காவல் நிலையத்திலிருந்து சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதும், அங்கிருந்த அரசு மருத்துவரை எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் மிரட்டியது மான சி.சி.டி.வி. காட்சிகள் நக்கீரனுக்கு பிரத்யேகமாக கிடைத்து அதிர வைத்துள்ளது.

Advertisment

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் மரண விவகாரத்தை முதன்முதலில் ஊடக வெளிச்சத் துக்கு நக்கீரன்தான் கொண்டுவந்தது.

tuty

105 சாட்சிகள், 38 சான்றாவணங்களைக் கொண்ட ஜெயராஜ்-பென்னிக்ஸ் வழக்கில், 47வது சாட்சியாக மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 01-03-2023 அன்று தனது தரப்பு சாட்சியத்தை கூறி முடித்துள்ளார், சம்பவத்தின்போது அதே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் டிரைவரா கப் பணியாற்றிய ஜெயசேகர் எனும் போலீஸ். ஆ2 முதல் ஆ9 வரை உள்ள குற்றவாளிகள் தங்களுக்கென பிரத்யேகமாக வழக்கறிஞர்கள் வைத்துக் கொண்ட நிலையில் ஆ1 குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மட்டும் தனக்கென வழக்கறிஞர்களை வைத்துக்கொள்ளாமல் பிரத்யேகமாக, தானே வாதிட்டுக்கொண்டார். இந்த சாட்சியங்களில் பெரும்பாலோனோரை குறுக்கு விசாரணை செய்த இன்ஸ் ஸ்ரீதர், "சம்பவத்தின்போது நான் அங்கு இல்லவே இல்லை. இல்லாத என்னை எப்படி இந்த வழக்கில் சேர்க்கலாம்..? அதுவும் முதன்மைக் குற்ற வாளியாக..? நான் அங்கு இருந்ததை நிரூபியுங்கள்.! அதற்கு சாட்சிகள் இருக்கா..? என்னுடைய டிரை வர் ஜெயசேகரை கேட்டுப் பாருங்கள். அப்பொ ழுது தெரியும். நான் அங்கு இல்லை என்பது'' என ஒவ்வொரு முறையும் மறுத்த நிலை யில், கடந்த 01-03-2023 அன்றுடன் முடிவடைந்த 47வது சாட்சி யான டிரைவர் ஜெயசேகர் வாக்குமூலம் இன்ஸ்பெக்ட ரை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளது.

"சம்பவ தினமான 19-06-2020 அன்று பச69ஏ 0635 வாகனத்துடன் அன்றைய டைரி துவக்கப்பட்டது. மாலை வேளையில் ஆய்வாளர் ஸ்ரீதருடன் பல்வேறு இடங்களுக்கு ரோந்து சென்ற நான், ஆய்வாளரை ஸ்டேஷனில் இறக்கி விட்டுவிட்டு அவருக்கு சாப்பாடு வாங்கச் சென்றேன். அப்பொழுது நேரம் இரவு 9 மணி. போலீஸாரான செல்லத்துரை மற்றும் தாமஸ் ஆகியோர் வெளியில் சாப்பிட்டுவிட்டு எஸ்.பாலகிருஷ் ணன், முருகன் மற்றும் அங்கிருந்த ஜெயராஜ், பென் னிக்ஸிற்கு சாப்பாடு வாங்கச் சென்றுவந்தார்கள். அப்பொழுதுதான் இன்ஸ்பெக்டர் இரவு முழுவதும் அங்கேயே இருந்துகொண்டு அனைவரையும் தூண்டிவிட்டு அடிக்க வைத்தார். இது நான் கண்ணால் கண்டது'' என்றி ருக்கிறது டிரைவர் ஜெயசேகரின் வாக்குமூலம். இது வழக்கிற்கு வலுச்சேர்த்த நிலையில், சாத்தான் குளம் மருத்துவமனையில் என்ன நடந்தது..? என்பது பற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் அனை வரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisment

tuty

சம்பவ தினத்திற்கு மறுநாளான 20-06-2020 அன்று காலை எட்டு மணியளவில் துவங்குகின்றது சாத்தான்குளம் அரசு மருத்துவ மனையின் 9ஆம் எண் சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகள். அதிலிருந்து, 8 மணி- போலீஸ் கார் உள்ளே வருகிறது. 8.06 எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் போலீஸ் ஜீப்பில் இருந்து வெளியே வருகிறார். 8.35 மணியளவில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் ஜீப்பிலிருந்து வெளியே இறங்கி தாங்கித் தாங்கி நடக்க முடியாமல் நடந்து வருகின்றனர். 8.36க்கு மருத்துவமனைக்கு உள்ளே அழைத்து செல்லப்படும் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஏற்கனவே அங்கேயிருந்த காவலர்களால் சூழ்ந்துகொள்ளப் படுகிறார்கள். அப்பொழுது 8.45க்கான காட்சியில் பென்னிக்ஸின் பின்பகுதி முழுவதும் இரத்தக்கறையாக இருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிகின்றது. இதேபோன்று ஜெயராஜின் பின்புறமும் காணப்பட்டது.

ww

Advertisment

9.11 மணியளவில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருடன் காவலர்கள் சாமதுரை மற்றும் செல்லதுரை நடந்து செல்கின்றனர். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் தாங்கித் தாங்கி முடியாமல் நடந்து செல்வதும் புலனாகின்றது. 9.30 மணியளவில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை யாரும் பார்க்காமல் இருக்க, போலீஸார் சூழ வெளியே உள்ள இரும்பு பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட னர். இந்த நேரத்தில் அங்குள்ள மருத்துவர் வெண்ணிலா அந்த வழியாக செல்வதும், 10.02 மணி யளவில் டாக்டர் வெண்ணிலா வுடன் போலீஸாரான முத்துராஜ் மற்றும் எஸ்.ஐ. பாலகிருஷ்ணனும் பேசிய நிலையில்... ஜெயராஜும் பென்னிக்ஸும் மருத்துவர் அறைக்கு உள்ளே செல்கின்றனர். முதலில் பென்னிக்ஸும், அடுத்து ஜெயராஜும் அனுப்பப்படுகின்ற னர். 10.07க்கு எஸ்.ஐ. மருத்துவ அறைக்கு உள்ளே செல்ல, 10.16க்கு ஜெயராஜ் அறையிலிருந்து வெளியே வருகிறார். தொடர்ந்து 10.26க்கு பென்னிக்ஸும் வெளியே வருகிறார். அவரையொட்டி போலீஸ் முத்துராஜ் வெளியே வரு கிறார். எனினும் 10.27க்குத்தான் எஸ்.ஐ. பால கிருஷ்ணன் அறையிலிருந்து வெளியே வருகிறார். தொடர்ந்து போலீஸார் சூழ்ந்து நின்றுகொண்ட நிலையில் பென்னிக்ஸ் தனது ரத்தக்கறை படிந்த ஆடையை கழற்றி வேறு துணியை உடுத்துவது குறிப்பிடத்தக்கது. அதன்பின் மீண்டும் போலீஸ் வாகனத்தின் பின்புறம் ஏற்றப்பட்டு அங்கிருந்து புறப்படுகின்றது காவல் நிலைய வாகனம்.

eedd

"பொதுவாக மெடிக்கல் மெமோவை காவல் நிலையத்தின் எஸ்.ஐ.தான் தயாரிக்க வேண்டும். ஆனால் எங்கே தாங்கள் மாட்டிக்கொள்வோமோ எனப் பயந்து காவலர் ரேவதியை விட்டு தயாரித்திருக்கின்றனர். அதில் முதலில் தேதி போடாமல் குறிப்பிடப்பட்டு பின்பு 19-06-2020 என்று குறிப்பிடப்பட்டது. காவல் நிலையத்திலிருந்து மருத்துவமனைக்கு நடந்து சென்றாலே 5 நிமிடம் ஆகும். ஆனால் மறுநாள் காலையில்தான் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது போலீஸ். இதற்கு ஆதாரமாக மருத்துவமனையின் வீடியோக்காட்சிகள் உள்ளன. இரண்டாவதாக, தங்களது காயங்களை டாக்டரிடம் கூறமுடியாத வண்ணம் டாக்டரின் அறையிலேயே இருந்துள்ளது போலீஸ். அதுபோக டாக்டரை மிரட்டிக்கூட பிட்னஸ் சர்டிபிகேட் வாங்கியிருக்க கூடும் என்பதுபோலும் உள்ளது டாக்டருக்கும், எஸ்.ஐ.க்குமான நீண்ட நெடிய காட்சிகள்'' என்கிறார் ஜெயராஜ் பென்னிக்ஸ் தரப்பு வழக்கறிஞரான ராஜீவ் ரூபஸ்.